Friday, May 10, 2024
Home » அமெரிக்க-இலங்கை புல்பிரைட் ஆணைக்குழு ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலையில் செயலமர்வு

அமெரிக்க-இலங்கை புல்பிரைட் ஆணைக்குழு ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலையில் செயலமர்வு

by Gayan Abeykoon
February 23, 2024 9:07 am 0 comment

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்கள் மற்றும் உயர் கல்வியை தொடரவுள்ள இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அமெரிக்க – இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் செயலமர்வொன்று அப்பல்கலைக்கழக ஒலுவில் வளாக தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (21) நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் அமெரிக்க -இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

அமெரிக்க – இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவானது இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்கள், கல்விப் பங்காண்மைகள், பரஸ்பர புரிதல் ஆகியவற்றை வளர்க்கும் புதிய சகாப்தத்துக்குள் பிரவேசித்துள்ளதாக, அவர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்துதல், அமெரிக்கா – இலங்கை மக்களுக்கு இடையிலான கல்வி மற்றும் அறிவியல் உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் ஆணைக்குழு முக்கிய பங்கு வகிக்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அறிவை விருத்தி செய்து, மாணவர்களை சிறந்த பட்டதாரிகளாக வெளியேற்றும் செயற்பாடுகளை அமெரிக்க-இலங்கை புல்பிரைட் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

ஒலுவில் விசேட, திராய்க்கேணி தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT