Saturday, April 27, 2024
Home » கோல்டன் கொலேஜ் சிட்டி கெம்பஸின் சான்றிதழ் வழங்கும் விழா

கோல்டன் கொலேஜ் சிட்டி கெம்பஸின் சான்றிதழ் வழங்கும் விழா

by Gayan Abeykoon
February 23, 2024 9:18 am 0 comment

கோல்டன் கொலேஜ் சிட்டி கெம்பஸ் ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கண்டி இந்து கலாசார நிலையத்தில் கல்வி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளரும் தலைவருமான ஏ.எம்.எம். பரக்கத் அலி தலைமையில் நாளை மறுதினம் 25ஆம் திகதி காலை 8:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக MR.Saheed M. Rismy (Chairman of National issues, Former president of Ceylon YMMA conference, Member of CCMSL, Former Director of SLILG &National Institute of co-operative Development), விசேட அதிதிகளாக Mr. M. M. Ramzy (Managing Director, Digana International SchoolDigana, Kandy),  Mr. Mohammed Fahmy Farook (Managing Director yes virtual campus Private Limited,  Chairman Yaqeen Education Systems private limited and CEO Panacea Business Consultancy.), Mr Wazeer Mukhtar (Director of Lanka Guardian commodities Private Limited vice president RPSL Consortium former member of pradeshiya Sabah Yatinuwara.) ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

 

இலங்கையில் வாழும் அனைவருக்கும் கல்வி சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதை தமது இலக்காகக் கொண்டு கல்விச் சேவையினை கோல்டன் கொலேஜ் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.

மத்திய மலை நாட்டின் தலைநகரமான கண்டி மாநகரில் 15 ஆண்டுகளாக சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாட நெறிகளை சர்வதேச தரச்சான்றிதழ்களுடன் தொடர்ந்து வழங்கி வருவதுடன் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கற்கை நெறியினை திறன்பட வழங்கி வரும் அதிஉயர் கல்வி நிறுவனமாக கோல்டன் கொலேஜ் சிட்டி கெம்பஸ் திகழ்கின்றது.

நாட்டின் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதலை மேற்கொள்வதற்கும் மாணவர்களது முன்னேற்றகரமான கல்வி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக இக்கல்வி நிறுவனம் 2009 ஆகஸ்ட் 8ம்திகதி ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முகாமைத்துவப்பணிப்பாளராகவும்  தலைவராகவும்  ஏ. எம்.எம்.  பரக்கத் அலி செயற்பட்டு வருகிறார்.  தொழிற்கல்வி விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுமத்தினர்கள் இணைந்து மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கற்கை நெறியை திறன் பட வழங்கி வருகின்றனர்.

இக்கல்லூரியில் கற்கை நெறியை மேற்கொள்ளவரும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் திறன்பட கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பட்டம் பெற்று வெளியே செல்லும் மாணவர்கள் தம் தொழில் துறையில் ஆரோக்கியமானதாகவும்  சிறப்பாகவும் மேற்கொள்வதற்கு அதி உட்ச கற்பித்தலை இக்கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.

சர்வதேச ரீதியாக மற்றும் உள்நாட்டு மட்டத்திலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்துதல் என்பனவற்றின் ஊடாக சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அதிக சந்தை வாய்ப்புள்ள மூன்றாம் நிலை தொழில் முறை கல்விக்குரிய கற்கை நெறிகளே இங்கு போதிக்கப்படுகின்றன. கூடிய அளவிலான மாணவ மாணவிகள் தொழில் தகைமையைப் பெற்றுக்கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் பதவிகளையும் வகித்து வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு உலக அங்கீகாரம் பெற்ற வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குவது கல்லூரியின் முக்கியமான தொழில் நோக்காகும். அந்த நோக்கத்திற்கு அமைய சிறிய மற்றும் பட்டப்படிப்பு, முகாமைத்துவம், கணினி தொழில் நுட்பம்,  முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் கல்வி,  கணக்கியல், எயார்லைன் டிக்கெட்டிங்,  ஆங்கில மொழி,  இஸ்லாமிய வங்கி முறை,  கையடக்கத் தொலைபேசி திருத்துதல் என இன்னும் எத்தனையோ கற்கை நெறிகள் திறமை மிக்க இலங்கை மாணவர்களுக்கு உரிய கல்வியை சிறந்த முறையில் பயிற்சி உடன் பெற்றுக் கொடுத்து அவர்களது தொழில் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றது.

கோல்டன் கொலேஜ் சிட்டி கெம்பஸ் எனும் இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி மூன்றாம் நிலை கல்வி தொழில் கல்வி ஆணை குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டு அரசு அங்கீகாரச் சான்றிதழ்கள் (TVEC Reg. No. PO9/0148)  மற்றும் சர்வதேச நாடுகள் உடைய பல்கலைக்கழக சான்றிதழ் அங்கீகாரத்தையும் (ISO 9001:2015| Asian College of Teachers-Thailand | OTHM-UK | Qualifi- UK | TCSD)  பெற்று செயல்படும் கல்வி நிறுவனம் ஆகும்.

கோல்டன் கொலேஜ் சிட்டி கெம்பஸ் கல்வி நிறுவனமானது ஆசிரியர்களுக்கான கற்கைநெறிகளை Asian College of Teachers என்னும் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து பின்வரும் பாடநெறிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

எனவே, இக்கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு கற்கை நெறிகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.

அதுவும் திறன் வாய்ந்த விரிவுரையாளர்கள் திறன்பட தமது பங்களிப்பை மாணவர்களின் நலன்களுக்காக செய்து வருகிறார்கள். பாடசாலையை விட்டு வெளியேறுவோருக்கான தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி திட்டங்களில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கு தூர இடங்களில் இருந்து வரும் மாணவர்களின் நலன் கருதி ஆண், பெண் இருப்பாலாருக்கும் வெவ்வேறான தங்குமிட விடுதி வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். தொழிலை நாடி நிற்கும் இளைஞர்கள் பாடசாலையை விட்டு வெளியேறுபவர்கள் இணைந்து கொள்ளும் விதத்தில் இங்கு பல்வேறுபட்ட கற்கைநெறிகள் மூன்றாம் நிலை தொழில் முறை கல்விகள் கற்பிக்கப்படுகின்றன.

தற்போது கா.போ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வகையில் கற்கை நெறிகள் போதிக்கப்படுகின்றன.

20-5

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT