Friday, May 10, 2024
Home » IPL 2024 MI vs DC: மும்பைக்கு எதிராக டெல்லி அபார ஆட்டம்; 257 ஓட்டங்கள் குவிப்பு

IPL 2024 MI vs DC: மும்பைக்கு எதிராக டெல்லி அபார ஆட்டம்; 257 ஓட்டங்கள் குவிப்பு

by Prashahini
April 27, 2024 8:37 pm 0 comment

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான IPL ஆட்டத்தில் 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று (27) பிற்பகல் 3.30 அணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. நாணயச்சுழந்சியல் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் – அபிஷேக் பொரேல் இணை ஓப்பனிங் செய்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்த ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் இப்போட்டியிலும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் 2024 சீசனின் அதிவேக அரைசதம் என்ற தனது சாதனையை சமன் செய்தார்.

அவரின் அதிரடியால் 2.4 ஓவர்களில் 50 ஓட்டங்களை கடந்த டெல்லி கேபிடல்ஸ், 6.4 ஓவர்களில் 100 ஓட்டங்களை தொட்டது. இதன்பின்னும் அதிரடியை வெளிப்படுத்திய ஜாக், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 27 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன்பின் அபிஷேக் பொரேல் சில பவுண்டரிகளை அடித்தாலும் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. அவர், 36 ஓட்டங்களும் நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் உடன் இணைந்து சாய் ஹோப் நம்பிக்கை அளித்தார். தனது பங்குக்கு 5 சிக்ஸர்களை விளாசி 17 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டானர். இதனால், 16 ஓவர்களில் 200 ஓட்டங்கள் தொட்டது டெல்லி அணி.

தொடர்ந்து ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்தனர். இவர்களும் அதிரடிக்கு பஞ்சம் வைக்கவில்லை. லூக் வுட் வீசிய 18ஆவது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ஓட்டங்கள்எடுத்தார். ரிஷப் பந்த் 29 ரன்களில் பும்ரா பந்தில் கேட்ச் ஆனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்கள் குவித்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்து 48 ஓட்டங்கள்சேர்த்தார். மும்பை தரப்பில் பும்ரா, பியூஷ் சாவ்லா, நபி, லூக் வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதற்கிடையே, IPL வரலாற்றில் டெல்லி அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT