Monday, May 20, 2024
Home » தமிழகத்தில் 58,200 இலங்கை அகதிகள்

தமிழகத்தில் 58,200 இலங்கை அகதிகள்

ஒருவருக்ேக வாக்களிக்கும் உரிமை

by Gayan Abeykoon
May 10, 2024 5:12 am 0 comment

—இந்திய அரசாங்கத்திடம் 2023 இல், சமர்ப்பிக்கப்பட்ட தகவலின் பிரகாரம் தமிழ் நாடு முழுவதிலுமுள்ள 104 முகாம்களில் 58,200 இலங்கை தமிழ் அகதிகளும் முகாம்களுக்கு  வெளியே 33,200 க்கும் மேற்பட்டோரும் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

இவர்களின் சிவில் ஆவணங்களைப் பொறுத்தவரையில் 95 வீதமானோர் இந்திய அடையாள அட்டைகளையும், 78 வீதமானோர் வங்கிக் கணக்குகளையும் ஒரு வீதமானோர் இலங்கைக் கடவுச்சீட்டுகளையும் 03 வீதமானோர் இலங்கை தேசிய அடையாள அட்டைகளையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே ஒரு இலங்கைத் தமிழரான நளினி கிருபாகரனுக்கு மட்டுமே, இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முகாம்களிலுள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

இருப்பினும், சுகாதார சேவைகள் அல்லது குடியுரிமைகள் கிடைக்காமல் மோசமான அகதி முகாம்களில் தொடர்ந்து சிரமங்களை இவர்கள் எதிர்கொண்டு வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT