Monday, April 29, 2024
Home » ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் ஸ்தாபகர் தின நிகழ்வு

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் ஸ்தாபகர் தின நிகழ்வு

by damith
February 13, 2024 10:49 am 0 comment

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழா நிகழ்வுகள் நேற்று முன்தினம் (11) கலாபீட மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. நளீமிய்யா கலாபீட நிர்வாக சபை மற்றும் ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலயம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நளீமிய்யா கலாபீட ஆளுநர் சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஜான் பளீல் கலந்து சிறப்பித்தார். கெளரவ அதிதியாக கலாபீட நிர்வாக சபைத் தலைவர் யாகூத் நளீம், சிறப்பு அதிதியாக கலாபீட முதல்வர் உஸ்தாத் அகார் முஹம்மத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஐம்பது வருட கல்விப்பணி நினைவுத் தபால் முத்திரை வெளியீடு, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் சொந்த நிதியில் நளீமிய்யாவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட சூரிய சக்தி மின்சாரம் ‘SOLAR POWER PROJECT’ அங்குரார்ப்பணம், கலாநிதி அரபாத் கரீம் (நளீமி) எழுதிய “ஜாமிஆ நளீமிய்யா” எண்ணக் கருவும் உருவாக்கமும் நூல் வெளியீடு மற்றும் நிறுவுனர்கள் தின பிரதான நிகழ்வின் கௌரவிப்பும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நளீமிய்யா ஆளுநர் சபை உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாயிஸ் முஸ்தபா உட்பட சீனன்கோட்டை பள்ளிச்சங்க பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், கலாபீட மாணவர்கள், விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

news100_compressed
(அஜ்வாத் பாஸி, அஷ்ரப் ஏ சமட்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT