Home » பாரதிபுரம் ஆட்கொலைச் சம்பவம் பொலிஸார் ஐவருக்கு ஆயுள் தண்டனை

பாரதிபுரம் ஆட்கொலைச் சம்பவம் பொலிஸார் ஐவருக்கு ஆயுள் தண்டனை

26 வருடங்களின் பின்னர் தீர்ப்பு

by damith
April 29, 2024 7:45 am 0 comment

தம்பலகாமம் பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளாக காணப்பட்ட பொலிஸார் ஐவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்று 26 வருடங்களின் பின்னர் இவர்களுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு பொலிஸார், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் ஆகியோருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டிய இவர்களுக்கு இத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி, அவர்களின் உயிரைக் காவு கொண்ட குற்றத்துக்காக இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக ஒன்று கூடியதாக 1998 ஜனவரி 30 இல், அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பொலிஸார் இவர்கள் மீது துப்பாக்கித்தாக்குதல் நடத்தியிருந்தனர்.இதனடிப்படையில் ஐவருக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

ஆட்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT