Wednesday, May 15, 2024
Home » நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

- அரைக்கோளங்கள் சந்திப்பு மண்டலத்தினால் வானிலை மாற்றம்

by Rizwan Segu Mohideen
April 29, 2024 7:51 am 0 comment

– பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று இணையும் மண்டலத்தினால் நாட்டின் வானிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, தென் மாகாணங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT