Wednesday, May 15, 2024
Home » ஈராக்கில் ஒருபால் உறவை குற்றமாக்கும் புதிய சட்டம்

ஈராக்கில் ஒருபால் உறவை குற்றமாக்கும் புதிய சட்டம்

by damith
April 29, 2024 11:26 am 0 comment

ஒரு பால் உறவுக்கு 10 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அதனை குற்றமாக்கும் சட்டமூலம் ஒன்று ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களும் ஒன்று தொடக்கம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்களுக்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இது நாட்டின் மதப் பெறுமானங்களை உறுதிப் படுத்துவதாக உள்ளது என்று இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஈராக்கிற்கு கறுப்புப் புள்ளியாக உள்ளது என்று உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு மிகப்பெரிய கூட்டணியைக் கொண்டுள்ள பழைமைவாத ஷியா முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இதில் ஒருபாலுறவுக்கு மரண தண்டனை விதிக்க ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டபோதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பை அடுத்து அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT