Friday, May 10, 2024
Home » இராணுவத் தளபதியினால் தனது பரசூட் பாடநெறி வீரர்களுக்கு பரசூட் சின்னம்

இராணுவத் தளபதியினால் தனது பரசூட் பாடநெறி வீரர்களுக்கு பரசூட் சின்னம்

by Rizwan Segu Mohideen
February 7, 2024 12:28 pm 0 comment

அடிப்படை பரசூட் பாடநெறி – எம்என்டிஎப் 04 இன் சின்னம் வழங்கும் விழா 2024 நேற்று (06) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே கலந்து கொண்டார்.

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர், இராணுவத்தைச் சேர்ந்த பதினைந்து வீரர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா ஆகியோர் குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தனர்.

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு

ஆரம்ப நிகழ்வாக கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்கவினால் இராணுவத் தளபதி மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கொமாண்டோ படையணியின் தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கே தர்மவர்தன வரவேற்புரை ஆற்றினார்.

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆகியோர் புகழ்பெற்ற பரசூட் சின்னத்தை பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு அணிவித்தனர்.

இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்ற இராணுவத் தளபதி

நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி, புதிய இராணுவ பரசூட் வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்த மதிப்புமிக்க சின்னத்தை பெறுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டினார். கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி காலம் முழுவதும் அவர்களின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக அவர் நன்றி தெரிவித்தார்.

பின்னர், பயிற்சியில் பங்கேற்றவர்களுடன் இராணுவத் தளபதி குழு படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, அனைத்து பங்கேற்பாளர்களும் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், அங்கு இராணுவத் தளபதிக்கு தனது பரசூட் பாடநெறியாளர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

பிரதிப் பதவி நிலைப்பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பரசூட்டில் சிக்கி இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் காயம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT