Home » இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்ற இராணுவத் தளபதி

இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்ற இராணுவத் தளபதி

by Rizwan Segu Mohideen
January 24, 2024 3:28 pm 0 comment

இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் இராணுவ பரசூட் வீரராக தகுதியை பெற்றார்.

இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் நேற்றுமுன்தினம் (22) குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 14 படையினர் உட்பட ஏனைய பங்கேற்பாளர்களுடன், உஹண விமானப்படைத் தள ஓடுபாதையில் MI-17 ஹெலிகொப்டர் விமானத்தில் சென்றார்.

தளபதி உஹண விமானப்படை தளத்தின் வளிமண்டலத்தில் பராசூட்டுடன் குதித்த அவர், கௌரவத்திற்குரிய வான்வழி வீரர்களின் குடும்பத்துடன் உத்தியோகபூர்வமாக இணைந்தார்.

இந்த சாதனையானது, இராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க வழித்தடமாக லெப்டினன் ஜெனரல் இராணுவ பரசூட் வீரராக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இராணுவத் தளபதியாக பதவிவகிக்கின்றமை சிறப்பம்சமாகும்.

மேலும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இராணுவ பரசூட் வீரராக வெற்றிகரமாக தகுதி பெற்ற சிரேஷ்ட மிக உயர்ந்த இராணுவ வீரர் என்ற குறிப்பிடத்தக்க சிறப்பை அடைந்துள்ளார்.

ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சீ.ஏ. டி சொய்சாவும் தளபதியுடன் இத்தகுதியைப் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT