Sunday, May 19, 2024
Home » தென்கிழக்காசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிவாகை சூடிய பொலன்னறுவை மாணவி

தென்கிழக்காசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிவாகை சூடிய பொலன்னறுவை மாணவி

by Gayan Abeykoon
January 24, 2024 3:46 pm 0 comment

ிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய கணித ஒலிம்பியாட் (SEAMO) போட்டியில் பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலை மாணவி முகம்மட் நபீல் இல்மா ஸைனப் இலங்கை சார்பில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஆங்கில மொழியில் மாத்திரம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற இப்பரீட்சையில் 28 நாடுகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் seamo பரீட்சையில் திறமையான இடங்களைப் பெறும் மாணவர்களே உலகத்தரம் வாய்ந்த போட்டிக்காக (SEAMO-X) அழைக்கப்படுகின்றனர்.

2023 இல் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் 1ஆம் இடம்பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாணவியொருவர் SEAMOX உலக தரப்போட்டிக்கு தெரிவானமை வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

22 நாடுகள் பங்குபற்றிய பரீட்சையில் PAPER_ B பிரிவில் உலக அளவில் 1000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 60ஆம் இடத்தைப் பெற்று MERIT MEDAL WINNER ஆக மொஹமட் நபீல் இல்மா ஸைனப் வெற்றிவாகை சூடியுள்ளார்.

பொலன்னறுவை முஸ்லிம் கொலனியில் வசிக்கும் பொ /முஸ்லிம் தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் மொஹமட் நபீல் இல்மா ஸைனப் பிரபல கணித ஆசிரியரும் துறைசார் வளவாளருமான கே.எல்.எம்.நபீல் மற்றும் ஆசிரியை வை.எல்.எப். சுக்றியா ஆகியோரின் மூத்த புதல்வியாவார்.

ஜெஸ்மி எம்.மூஸா…

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT