Monday, May 20, 2024
Home » கேரளா, ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையுடன் ஒப்பந்தம்

கேரளா, ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையுடன் ஒப்பந்தம்

by Gayan Abeykoon
May 10, 2024 5:59 am 0 comment

இந்திய கேரளா கொச்சியில் அமைந்துள்ள  ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கடந்த  06ஆம் திகதி  திங்கட்கிழமை, கொழும்பு ஹில்டன் ரெசிடென்சியில் ஹோட்டலில்  இலங்கைக்கான பணிப்பாளர் சாஹிர் மர்சூக் தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இராஜகிரி கல்லூரியின் அதிபர்  சகோ. டாக்டர் சஜு, இந்திய வெளியுறவு சேவை வேணு ராஜாமோனி, இணை இயக்குனர் ராஜகிரி கல்லூரி டாக்டர் பினோய் ஜோசப் மற்றும்  ராஜகிரி கல்லூரி மனித வளங்கள் பொறுப்பாளர்  டாக்டர் மனோஜ் மேத்யூ ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மூத்த பேராசிரியர் பத்மலால் எம். மனோஜ் மற்றும் ராஜகிரி கல்லூரியின் அதிபர் சகோ. டாக்டர் சஜு  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் துணைத் தலைவர் மூத்த பேராசிரியர் சி.பி. உடவத்த, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீட பீடாதிபதி கலாநிதி துஷான் ஜயவர்தன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சர்வதேச அலுவல்கள் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி சண்டமாலி கல்டோலகே,  தென்கிழக்கு பல்கலைக்கழக கணிதவியல் திணைக்களப் பேராசிரியர் ஏ.எம். ரஸ்மி, தென்கிழக்கு பல்கலைக்கழக  திணைக்களப் பேராசிரியர் (சந்தைப்படுத்தல்) பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும்  பாடசாலை அதிபர்கள்  ரிஸ்வி மரிக்கார் (சாஹிரா கல்லூரி), மொஹமட் ரிஸ்கி (ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி), திருமதி. எப். சரூனா (அல் ஹிதாயா கல்லூரி), திருமதி. ஏ.எல். எஸ். நசீரா ஹசனார் (கைரியா பெண்கள் கல்லூரி) மற்றும் பிரதி அதிபர் பர்ஹானா அமீர்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு  சிறப்பித்தமைக்கு  இலங்கைக்கான பணிப்பாளர் சாஹிர் மர்சூக் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT