Thursday, May 9, 2024
Home » வெலிசறையில் அமானா வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையம் திறப்பு

வெலிசறையில் அமானா வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையம் திறப்பு

by Rizwan Segu Mohideen
February 1, 2024 11:28 am 0 comment

நாடு முழுவதிலும் சமூகத்தாருக்கு இலகுவில் அணுகக்கூடிய மற்றும் சௌகரியமான வங்கிச் சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அமானா வங்கியின் நோக்கத்துக்கமைவாக, வெலிசர பகுதியில் தனது புதிய சுய வங்கிச் சேவை நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வெலிசர பகுதியில் அமைந்துள்ள Phoenix காட்சியறை வளாகத்தில் இந்த சுய வங்கிச் சேவை நிலையம் நிறுவப்பட்டுள்ளதுடன், இது அமானா வங்கியின் 59 ஆவது வாடிக்கையாளர் பிரசன்ன அமைவிடமாகவும் அமைந்துள்ளது. 

அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், வியாபார வங்கியியல் உப தலைவர் இர்ஷாத் இக்பால், கூட்டாண்மை வங்கியியல் உதவி உப தலைவர் ராஜேந்திர ஜயசிங்க, Phoenix பிரதம செயற்பாட்டு அதிகாரி புதித லேகம்ஆரச்சி மற்றும் வங்கியினதும் Phoenix இனதும் ஊழியர்களின் பிரசன்னத்தில் சுய வங்கிச் சேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வெலிசர சுய வங்கிச் சேவை நிலையத்தினூடாக எவ்வேளையிலும் பணத்தை மீளப் பெறுவது, வைப்புச் செய்வது மற்றும் காசோலை வைப்பு போன்ற வசதிகள் வழங்கப்படும்.

இந்த விரிவாக்கம் தொடர்பாக அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சேவை வலையமைப்பை வெலிசர பகுதிக்கும் விஸ்தரிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். புதிய மெருகேற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Phoenix காட்சியறையில் சுய வங்கிச் சேவை நிலையத்தை நிறுவியுள்ளோம். அதனூடாக எமது மக்களுக்கு நட்பான வங்கி மாதிரியை தொடர்ந்தும் விரிவாக்கம் செய்த வண்ணமுள்ளோம். சமூகத்தாருக்கு வங்கிச் சேவைகளை அதிகம் அணுகக் செய்வது மற்றும் அவர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் எமது நோக்கத்துக்கமைய இந்தத் திட்டம் அமைந்துள்ளது.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக த ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT