Thursday, May 9, 2024
Home » ரூ. 1 இலட்சம் பெறுமதியான பன்மொழி நூல்கள் அன்பளிப்பு
அநுராதபுரம் பொதுநூலகத்திற்கு

ரூ. 1 இலட்சம் பெறுமதியான பன்மொழி நூல்கள் அன்பளிப்பு

by mahesh
January 31, 2024 12:30 pm 0 comment

தேசிய மொழிப் பிரிவின் அநுராதபுரம் மாவட்ட அலுவலகம் ஊடாக ரூபாய் ஒரு இலட்சம் பெறுமதியான பன்மொழி புத்தக தொகுதி அநுராதபுரம் மாநகர சபையின் பொது நூலகத்திற்கு அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜெயசுந்தர இந்த புத்தகத் தொகுதியை மாநகர ஆணையாளரிடம் வழங்கி வைத்தார். பின்னர் நூலக பொறுப்பாளரிடம் அந்தப் புத்தகத்தொகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேசிய மொழி நடைமுறையை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் ஊடாக இப்புத்தகத் தொகுதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அநுராதபுரம் மேலதிக மாவட்ட செயலாளர் சாமிலா விக்ரம ஆரச்சி, அநுராதபுரம் மாநகர ஆணையாளர் ருவான் விஜேசிங்க,தேசிய மொழி ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவியாளர் ரஷ்மி லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திறப்பனை தினகரன் - அ.புரம் மேற்கு தினகரன் நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT