Saturday, April 27, 2024
Home » இலங்கை பாராளுமன்ற குழு பிரித்தானியா பயணம்

இலங்கை பாராளுமன்ற குழு பிரித்தானியா பயணம்

by mahesh
January 31, 2024 12:40 pm 0 comment

இலங்கை பாராளுமன்ற குழுவொன்று அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ளது. பிரித்தானியா பாராளுமன்ற முறைகள் மற்றும் குழுக்கள் முறைகள் சம்பந்தமான செயலமர்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் சென்றுள்ளனர். இதல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹனதீர, உப செயலாளர் ஹன்ஸ அபேசேகர, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.யூ.எம் வாஸிக் உட்பட 12 பேர் கொண்ட குழுவொன்றே பிரித்தானியா சென்றுள்ளது.

இச்செயலமர்வு பிரித்தானியா பாராளுமன்றத்தில் இடம் பெற்றது. இவ் விஜயத்தின் போது பிரித்தானியா பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

(வெலிகம தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT