Friday, May 10, 2024
Home » இன்று முதல் 5 நாட்களுக்கு நாடளாவிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று முதல் 5 நாட்களுக்கு நாடளாவிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

- இன்றும் நாளையும் விசேட பூச்சியியல் ஆய்வு

by Prashahini
December 18, 2023 8:07 am 0 comment

– இவ்வருடத்தில் இதுவரை 82,036 பேருக்கு டெங்கு காய்ச்சல்; 49 மரணங்கள்

இன்று (18) முதல் 5 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு , கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்றும் (18) நாளையும் (19) விசேட பூச்சியியல் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக அவர்​ குறிப்பிட்டுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 82,036 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT