ரிப்கான் பதியுதீனுக்கு பிணை

ரிப்கான் பதியுதீனுக்கு பிணை-Rifkan Bathiudeen Released on Bail

ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (17) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகள் மற்றும் ரூபா 25,000 ரொக்கம் ஆகிய பிணைகளின் அடிப்படையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, அவருக்கு வெளிநாட்டு பயண தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பிரதி ஞாயிறு தோறும் அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் இதன்போது நிபந்தனை விதிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கடந்த மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

தலைமன்னார் பிரதேசத்திலுள்ள ரூ. 240 இலட்சம் பெறுமதியான காணியை, போலி காணி உறுதி தயாரித்து விற்றதாக தெரிவிக்கப்படும் 2016ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, ரிப்கான் பதியுதீன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போது, அவர் விசாரணைக்கு வருகை தராமை காரணமாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பில் ரிப்கான் பதியுதீனுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...