ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் பெப். 20 வரை நீடிப்பு | தினகரன்


ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் பெப். 20 வரை நீடிப்பு

ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் பெப். 20 வரை நீடிப்பு-Rifkan Bathiudeen Re Remanded Till Feb 20

சிஐடியால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவரை இன்று (06) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தியபோது, இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

தலைமன்னார் பிரதேசத்திலுள்ள ரூ. 240 இலட்சம் பெறுமதியான காணியை, போலி காணி உறுதி தயாரித்து விற்றதாக தெரிவிக்கப்படும் 2016ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, ரிப்கான் பதியுதீன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போது, அவர் விசாரணைக்கு வருகை தராமை காரணமாக கடந்த மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...