92 ஒக்டேன் பெட்ரோல் விலை அதிகரிப்பு | தினகரன்


92 ஒக்டேன் பெட்ரோல் விலை அதிகரிப்பு

விலை சூத்திரத்தின் பிரகாரம் நேற்று நள்ளிரவு (11) முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்   செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 ஒக்டேன்பெட்ரோலின் விலையில் மாத்திரமே மாற்றமடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  

அதன் அடிப்படையில் 92 ஒக்டேன்பெட்ரோலின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.ஓ.சி நிறுவனம் 92 ஒக்டேன்பெட்ரோலின் விலையை 7 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 

இதன் பிரகாரம் 92 ஒக்டேன்பெட்ரோலின் விலைகள் அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 138 ரூபாவிற்கும் ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களில் 147 ரூபாவிற்கும் விற்கப்படும். 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 135 இலிருந்து ரூபா 138 ஆக ரூபா 3 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 164 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 159 ஆக ரூபா 7 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 136 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 134 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) பெற்றோல் 92 விலையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (11) முதல் அமுலாகும் வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 7 இனால் அதிகரித்துள்ளதோடு, ஏனையவற்றின் விலைகளில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IOC - இந்தியன் ஒயில் நிறுவனம்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 140 இலிருந்து ரூபா 147 ஆக ரூபா 7 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 164  (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 162 ஆக ரூபா 7 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 113 ஆக ரூபா 10 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 136  (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 134 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Add new comment

Or log in with...