தனியாரிடம் வில்லை, ஸ்டென்ட்; மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை | தினகரன்

தனியாரிடம் வில்லை, ஸ்டென்ட்; மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை

 
கண்புரை அல்லது விழிவெண்படல அறுவை சிகிச்சைக்கான தொடுகை வில்லை (Intraocular Lens -IOL) மற்றும் மாரடைப்பு நோய்க்கான ஸ்டென்ட் (Stent) போன்றவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
 
கொழும்பு, கண்டி போன்ற அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, வைத்தியர்களால் இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக, சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
 
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வைத்தியர்கள், தனியார் நிறுவனங்கள் சிலவற்றுடன் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபடுவதோடு, அதற்காக அவர்களுக்கு தரகுப் பணம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனை அடுத்து, இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 
 
அத்துடன் இதனால் அசெளகரியங்களுக்குள்ளாகும் நோயாளிகளைக் கருத்திற்கொண்டு, குறித்த விடயத்தை உடனடியாக தடை செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 

Add new comment

Or log in with...