Thursday, May 9, 2024
Home » லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.115, ரூ.55, ரூ.23 இனால் குறைப்பு

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.115, ரூ.55, ரூ.23 இனால் குறைப்பு

- பண்டிகையையிட்டு மக்களுக்கு சலுகை

by Rizwan Segu Mohideen
April 1, 2024 11:48 am 0 comment

இன்று நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதற்கமைய,

12.5kg: ரூ.135 இனால் குறைப்பு – ரூ. 4,115
5kg: ரூ.55 இனால் குறைப்பு – ரூ.1,652
2.3kg: ரூ.23 இனால் குறைப்பு – ரூ.772

விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பண்டிகையையில் இது மக்களுக்கு சலுகையாக அமையுமென அவர் தெரிவித்தார்.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்: (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)

  • 12.5kg: ரூ. 4,250 இலிருந்து ரூ. 4,115 ஆக ரூ. 115 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,707 இலிருந்து ரூ. 1,652 ஆக ரூ. 55 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 795 இலிருந்து ரூ. 772 ஆக ரூ. 23 இனால் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் ஏற்கனவே நிலவும் விலைகள்

இம்மாத லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

கடந்த பெப்ரவரி மாதம் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை என Litro நிறுவனம் அறிவித்திருந்தது.

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.685, ரூ.276, ரூ.127 இனால் அதிகரிப்பு

இறுதியாக கடந்த ஜனவரி மாதம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)

  • 12.5kg: ரூ. 3,565 இலிருந்து ரூ. 4,250 ஆக ரூ. 685 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,431 இலிருந்து ரூ. 1,707 ஆக ரூ. 276 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 668 இலிருந்து ரூ. 795 ஆக ரூ. 127 இனால் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,985 இலிருந்து ரூ. 4,740 ஆக ரூ. 755 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,595 இலிருந்து ரூ. 1,900 ஆக ரூ. 305 இனால் அதிகரிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT