Home » லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.685, ரூ.276, ரூ.127 இனால் அதிகரிப்பு

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.685, ரூ.276, ரூ.127 இனால் அதிகரிப்பு

- 3% VAT அதிகரிப்புடன் அமுலுக்கு வரும் வகையில் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
January 1, 2024 1:07 pm 0 comment

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதற்கமைய,

12.5kg: ரூ.685 இனால் அதிகரிப்பு – ரூ. 4,250
5kg: ரூ.276 இனால் அதிகரிப்பு – ரூ.1,707
2.3kg: ரூ.127 இனால் அதிகரிப்பு – ரூ.795

விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் 15% இலிருந்து 18%ஆக அதிகரிக்கும் 3% VAT அதிகரிப்பு காரணமாக குறித்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக கடந்த மாதங்களில் மாதாந்தம் 05ஆம் திகதி முதல் விலைத் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், புது வருட தினமான இன்று குறித்த விலைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்: (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)

  • 12.5kg: ரூ. 3,565 இலிருந்து ரூ. 4,250 ஆக ரூ. 685 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,431 இலிருந்து ரூ. 1,707 ஆக ரூ. 276 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 668 இலிருந்து ரூ. 795 ஆக ரூ. 127 இனால் அதிகரிப்பு

டிசம்பர் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை; நிறுவனங்கள் அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள்

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் ஏற்கனவே நிலவிய விலைகள்

நள்ளிரவு முதல் லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.95, ரூ.38, ரூ.18 இனால் அதிகரிப்பு

பண்டிகை காலத்தையிட்டு, டிசம்பர் மாதம் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை என நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

இறுதியாக கடந்த நவம்பர் மாதம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)

  • 12.5kg: ரூ. 3470 இலிருந்து ரூ. 3,565 ஆக ரூ. 95 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. ரூ. 1393 இலிருந்து ரூ. 1,431 ஆக ரூ. 38 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 650 இலிருந்து ரூ. 668 ஆக ரூ. 18 இனால் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,835 இலிருந்து ரூ. 3,985 ஆக ரூ. 150 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,535 இலிருந்து ரூ. 1,595 ஆக ரூ. 60 இனால் அதிகரிப்பு

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT