Saturday, July 13, 2024
Home » நள்ளிரவு முதல் லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.95, ரூ.38, ரூ.18 இனால் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.95, ரூ.38, ரூ.18 இனால் அதிகரிப்பு

– புதிய விலை: ரூ. 3,565, ரூ. 1,431, ரூ.668

by Rizwan Segu Mohideen
November 4, 2023 10:43 am 0 comment

இன்று நள்ளிரவு (05) முதல் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதற்கமைய,
12.5kg: ரூ.95 இனால் அதிகரிப்பு – ரூ. 3,565
5kg: ரூ.38 இனால் அதிகரிப்பு – ரூ.1,431
2.3kg: ரூ.18 இனால் அதிகரிப்பு – ரூ.668

விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்: (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)

  • 12.5kg: ரூ. 3470 இலிருந்து ரூ. 3,565 ஆக ரூ. 95 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. ரூ. 1393 இலிருந்து ரூ. 1,431 ஆக ரூ. 38 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 650 இலிருந்து ரூ. 668 ஆக ரூ. 18 இனால் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்

கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,127 இலிருந்து ரூ. 3470 ஆக ரூ. 343 இனால் அதிகரிப்பு
    5kg: ரூ.1,256 இலிருந்து ரூ. 1393 ஆக ரூ. 137 இனால் அதிகரிப்பு
    2.3kg: ரூ. 587 இலிருந்து ரூ. 650 ஆக ரூ. 63 இனால் அதிகரிப்பு

கடந்த செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 2,982 இலிருந்து ரூ. 3,127 ஆக ரூ. 145 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,198 இலிருந்து ரூ. 1,256 ஆக ரூ. 58 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 561 இலிருந்து ரூ. 587 ஆக ரூ. 26 இனால் அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதம்: உலக சந்தையில் விலை அதிகரித்த போதிலும் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றம் செய்யவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை 05ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,186 இலிருந்து ரூ. 2,982 ஆக ரூ. 204 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,281 இலிருந்து ரூ. 1,198 ஆக ரூ. 83 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 598 இலிருந்து ரூ. 561 ஆக ரூ. 37 இனால் குறைப்பு

கடந்த ஜூன் 05ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,638 இலிருந்து ரூ. 3,186 ஆக ரூ. 452 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,462 இலிருந்து ரூ. 1,281 ஆக ரூ. 181 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 681 இலிருந்து ரூ. 598 ஆக ரூ. 83 இனால் குறைப்பு

கடந்த மே 04ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,738 இலிருந்து ரூ. 3,638 ஆக ரூ. 100 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,502 இலிருந்து ரூ. 1,462 ஆக ரூ. 40 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 700 இலிருந்து ரூ. 681 ஆக ரூ. 19 இனால் குறைப்பு

கடந்த ஏப்ரல் 05ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,743 இலிருந்து ரூ. 3,738 ஆக ரூ. 1,005 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,904 இலிருந்து ரூ. 1,502 ஆக ரூ. 402 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 883 இலிருந்து ரூ. 700 ஆக ரூ. 183 இனால் குறைப்பு

கடந்த மார்ச் மாதம் விலைச்சூத்திரத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,409 இலிருந்து ரூ. 4,743 ஆக ரூ. 334 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,770 இலிருந்து ரூ. 1,904 ஆக ரூ. 134 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 822 இலிருந்து ரூ. 883 ஆக ரூ. 61 இனால் அதிகரிப்பு

இதேவேளை, கடந்த ஜனவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 3,835 இலிருந்து ரூ. 3,985 ஆக ரூ. 150 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,535 இலிருந்து ரூ. 1,595 ஆக ரூ. 60 இனால் அதிகரிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT