Saturday, May 11, 2024
Home » GCE O/L விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் 02 வாரங்களில் வெளியீடு
180,000 மாணவர்களின் எதிர்பார்ப்பு

GCE O/L விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் 02 வாரங்களில் வெளியீடு

சபையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

by gayan
April 28, 2024 11:55 am 0 comment

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை முடிவுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும்

என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வழமையாக உள்ளதை விட இம்முறை மீள் பரிசீலனைக்காக இரண்டு மடங்கு பரீட்சை விடைத்தாள் தொகை கிடைத்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அடுத்த மாத முற்பகுதியில் அதனை வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னராக மீள் பரிசீலனை முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்ட அவர், அது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT