Saturday, May 11, 2024
Home » ஊடகவியலாளர்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம்

ஊடகவியலாளர்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம்

- பதிவு செய்யும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களுக்கும் ஒரு QR குறியீடு

by Prashahini
April 28, 2024 11:05 am 0 comment

– தொழிலாளர்களுக்கு தொழில் கௌரவத்தை வழங்கும் www.garusaru.lk இணையத்தளம்

இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு http://www.garusaru.lk என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி அதில் அவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இரத்தினபுரி வெரலுபே செஞ்சுரியா ஹோட்டலில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற ஜயகமு ஸ்ரீலங்கா – ஊடகவியலாளர் மாநாட்டில் இடம்பெற்றது.

கருசரு இணையதளமானது முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 20 பிரிவினருக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களுக்கும் ஒரு QR குறியீடு கிடைக்கும், இதனால் அவர்கள் தங்கள் வேலையை எளிதாக மேற்கொள்ள முடியும்.

முறைசாரா தொழிலாளிகளுக்கு தொழில் கௌரவத்தை வழங்கும் ‘கரு சரு’ வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களை இணைத்து உருவாக்கப்பட்ட http://www.garusaru.lk இணையத்தளத்தின் அறிமுகம் இரத்தினபுரியில் ஆரம்பமான ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை’யில் இடம்பெற்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவின் பிரகாரம் ‘கரு சரு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த 20 துறைகளில் பணிபுரிபவர்கள் தற்போது சமூக பாதுகாப்பு கட்டமைப்பில் பங்களிக்கவில்லை. கருசரு திட்டமானது முச்சக்கர வண்டி ஓட்டுநர், வாகன பழுதுபார்ப்பவர், கலைஞர், அழகுக்கலை நிபுணர், தச்சர், தச்சன், மேசன், மீனவர், பேக்கரி மற்றும் உணவு விநியோகத் தொழிலாளி, ஊடகவியலாளர் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

“முறைசாரா தொழிலாளர்களை தொழில் வல்லுநர்களாக அங்கீகரிக்க இந்த நாடு இன்னும் தயாராகவில்லை. தொழிலாளிகள் முறைசார் முறைசாரா என வகைப்படுத்தப்பட்டிருக்கிறீரார்கள். 1900 இல் தொழிலாளர் திணைக்களம் அமைக்கப்பட்டாலும், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களைப்முறைசாராத தொழிலாளிகள் தொழில் வல்லுநர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனால்தான் நாங்கள் எங்கள் புதிய வேலைவாய்ப்பு திருத்த சட்டத்தின் மூலம் முரசரத் தொழிலாளிகளுக்கு கௌரவத்தை வழங்க முன்வந்துள்ளோம்

எமது சட்டமூலத்தை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். முரசரத் தொழிலாளிகள் தொழில்முறை சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்களது தொழில் கௌரவத்துக்கான சட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் விதிகள், நிபந்தனைகள் மற்றும் தகுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள் .

எனவே தரநிலைகள் நிறுவப்பட்டதும், உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். அது நடைமுறைக்கு வந்தவுடன், வேலைவாய்ப்பிற்கு உரிமம் இருப்பது கட்டாயமாகிவிடும், இது முறைசாரா துறையில் தொழில்முறையின் மதிப்பை மேம்படுத்தும்.

இரு வாரங்களில் இச்சட்ட மூலம்  அமைச்சரவையின் அனுமதிக்க சமர்ப்பிக்கப்படும்.” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT