Friday, May 17, 2024
Home » எரிபொருள் விலை குறைப்புடன் பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

எரிபொருள் விலை குறைப்புடன் பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

- இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்

by Prashahini
May 2, 2024 8:59 am 0 comment

எரிபொருள் விலை குறைப்புடன் பஸ் கட்டணம் குறைக்கப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் இன்று (02) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில், இதன்போது டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்திலும் பஸ் கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கமவி அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து அதன் பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT