Monday, May 20, 2024
Home » சாயிநாதனின் சரணாலயத்தில் சீதையம்மனின் கலசங்கள்
கொட்டாஞ்சேனை

சாயிநாதனின் சரணாலயத்தில் சீதையம்மனின் கலசங்கள்

by Gayan Abeykoon
May 9, 2024 6:14 am 0 comment

நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா  எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை (19)  வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவுக்காக  அயோத்தி இராமர் கோயிலிலிருந்து சீதையம்மனுக்கு சீர்வரிசையாக அனுப்பி வைக்கப்பட்ட தெய்வீக கோபுர கலசங்கள், கொழும்பு  கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள   வரதராஜ விநாயகர் கோயில்  வளாகத்திலுள்ள  சீரடி சாயிநாதனின் சரணாலயத்துக்கு இன்று   வியாழக்கிழமை மாலை 6.00  மணிக்கு கிடைக்கும்.

இந்நிலையில்   சாயிநாதனின் சரணாலயத்தில் இன்று  மாலை 6.00 மணி முதல் எதிர்வரும்  சனிக்கிழமை காலை 6.00 மணிவரை கலசங்களை பக்தர்கள் வணங்கி ஆசி பெற்றுக்கொள்ளலாம். கிடைத்தற்கரிதான  இப்பொன்னான பாக்கியத்தை நமக்கு அருளிய சீரடி பாபாவுக்கு நன்றி கூறி அருள் பெறுமாறு, இதன் அறங்காவலர் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT