Home » பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் வெயிலில் நடமாடுவதை தவிர்க்கவும்

பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் வெயிலில் நடமாடுவதை தவிர்க்கவும்

by Gayan Abeykoon
May 9, 2024 5:46 am 0 comment

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் பரீட்சை இடைவேளை நேரங்களில் வெயிலில் நடமாடுவதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை இடைவேளை நேரங்களில் மதிய உணவுக்காக நீண்டதூரம் பயணம் செய்து வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும்.

கிராமப்புறங்களிலுள்ள மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றினாலும் கிடைக்கும் இடைவேளை நேரத்தில் வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.

 

இதனால் மாணவர்கள் சிலர் உடல் சோர்வு, மயக்கம் போன்றவற்றுக்குள்ளாகி வருகின்றனர். எனவே பரீட்சை எழுதும் மாணவர்கள் முடிந்தவரை  நீராகாரம் உள்ளிட்ட உணவுகளை கையோடு எடுத்து வருவது சிறந்தது. கடும் வெப்பம் நிலவும் காலப்பகுதியில் மதிய நேரம் பயணம் செய்வதை தவிர்ப்பதன் மூலம் பரீட்சைக்கு உரிய நேரத்திற்கு வருகை தரமுடியுமென சுட்டிக்காட்டுகின்றனர். பெற்றோர்கள் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தில் கூடிய அக்கறை காட்டுமாறும் பிராந்திய சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT