Monday, May 20, 2024
Home » இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

by Gayan Abeykoon
May 9, 2024 6:43 am 0 comment

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பும் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் நேற்று (08) பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாரக் தலைமையில் மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூதூர் தள வைத்தியசாலை வைத்தியர் என். நிப்ராஸ் மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு வைத்தியமுகாமை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

வைத்திய முகாமில் நீரிழிவு, இரத்த அழுத்தம், தொற்றாநோய்கள், கொலஸ்ட்ராலுக்கான இரத்த பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

வைத்திய முகாம் நிகழ்விற்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் என பலரும் கலந்துகொண்டனர்.

தோப்பூர் குறூப், கிண்ணியா மத்திய நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT