Saturday, April 27, 2024
Home » மக்களின் எதிர்ப்பையடுத்து கீரிமலையில் கைவிடப்பட்ட நில அளவைப் பணிகள்

மக்களின் எதிர்ப்பையடுத்து கீரிமலையில் கைவிடப்பட்ட நில அளவைப் பணிகள்

by mahesh
March 27, 2024 1:10 pm 0 comment

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் கையளித்ததையடுத்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலக ப்பிரிவின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் ஜே/226 மற்றும் காங்கேசன்துறை ஜே/233 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன் புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 29 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் இந்த அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT