Thursday, May 9, 2024
Home » IPL 2024 SRH vs MI: வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்?

IPL 2024 SRH vs MI: வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்?

by Prashahini
March 27, 2024 2:58 pm 0 comment

IPL T20 கிரிக்கெட் தொடரில் இன்று (27) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கின்றன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

ஜஸ்பிரீத் பும்ராவின் அபாரமான பந்து வீச்சையும் ரோஹித் சர்மா, டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டத்தையும் மும்பை அணியில் உள்ள மற்ற வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தவறினர். அதேவேளையில் ஹர்திக் பாண்டியா 7ஆவது வீரராக களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் இருக்கக்கூடும்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. இன்றைய ஆட்டத்தில் முதல்தரவரிசை துடுப்பாட்ட வீரர்களான மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா ஆகியோரும் நடுவரிசை துடுப்பாட்ட வீரர்களான ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் ஆகியோரும் பொறுப்புடன் செயல்பட்டு ஓட்டங்கள் குவித்தால் மும்பை அணிக்கு சவால் கொடுக்கலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT