Monday, May 20, 2024
Home » பிரபல நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேசு காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேசு காலமானார்

by mahesh
March 27, 2024 2:50 pm 0 comment

சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபல்யமானவர் சேஷு. அவர் ஏராளமான படங்களிலும் கொமெடியனாக நடித்து இருக்கிறார். கடைசியாக அவர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் கொமெடியில் கலக்கி இருந்தார்.

சேஷு, ஒரு வாரம் முன்பு அவர் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சேஷு மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT