Saturday, April 27, 2024
Home » உண்​ைம உயர்ந்தது

உண்​ைம உயர்ந்தது

by sachintha
March 26, 2024 8:51 am 0 comment

பொய்மையை உடைத்து

தீமைதனை கொளுத்தி

துன்பங்களை களைந்து

சாவினையும் வென்று

சரித்திரம் ஒன்று நிகழ்ந்தது

கல்லறை தகர்ந்தது – அதில்

புது வாழ்வு மலர்ந்தது

கிறிஸ்துவின் மெய் உயர

உண்மை உலகமதில் உயிர்த்தது

இரவு விண்மீன் ஒன்று

இன்று பகலவனாய்

பரிணாமம் எடுத்தது

இது கிழக்கே தோன்றி

மேற்கே மறைவதன்று

நாற்திசையும் நாற்பொழுதும்

நாடெங்கும் நம்பிகைதரும்

அணையா சுடரொளி – அதுதான்

கிறிஸ்துயென்ற பேரொளி

இவ்விகமதில் எதுவும் நிலையன்று

சாவும் அதற்கு விலக்கன்று – என

இயேசு இறப்பினையும் வென்று

சரித்திரத்தில் படைத்திட்டார் சான்று

அதுதான் ஈஸ்டர் பெருவிழா

எல்.எஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT