Wednesday, May 8, 2024
Home » உயர் செயற்திறன் மையத்திற்கு மூவருக்கு பயிற்றுவிப்பு நியமனம்

உயர் செயற்திறன் மையத்திற்கு மூவருக்கு பயிற்றுவிப்பு நியமனம்

by Rizwan Segu Mohideen
March 22, 2024 9:04 pm 0 comment

இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் மையத்துக்கு மூவரை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

இதில் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் மையத்தின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கை தேசிய அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக 2008–2015 ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்டிருந்தார். தற்போது உயர் செயற்திறன் மையத்தில் பணியாற்ற இணைந்துள்ளார்.

அதேநேரம் உயர் செயற்திறன் மையத்தின் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணராக ஹஷான் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட ஊட்டச்சத்து பதிவாளராக செயற்பட்டு வந்தார்.

இதேவேளை உயர் செயற்திறன் மையத்தின் புதிய உடல் சிகிச்சை நிபுணராக ஜொனதன் போர்டெர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜொனதன் போர்டெர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உடல் சிகிச்சை நிபுணராக செயற்பட்டுள்ளார்.

ஜொனதன் போர்டெர் மார்ச் முதலாம் திகதியிலிருந்து தன்னுடைய பணியை ஆரம்பித்துள்ளார். 19 வயதின் கீழ் அணியிலிருந்து தன்னுடைய பணியை ஆரம்பித்த இவர் அனைத்து தேசிய தரத்திலான அணிகளுடனும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க நியமனம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT