Monday, May 20, 2024
Home » தேர்தல் வேண்டாமென கூறியவர்கள் இன்று நடத்த வேண்டுமென்கின்றனர்

தேர்தல் வேண்டாமென கூறியவர்கள் இன்று நடத்த வேண்டுமென்கின்றனர்

by mahesh
May 8, 2024 8:55 am 0 comment

மாகாண சபைத் தேர்தல் நடத்தக் கூடாது, தேர்தலை ஒத்திப் போட வேண்டுமென கூக்குரலிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் தற்போது தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளர்களின் பங்களிப்புடன், வடமேல் மாகாணத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபை வளாகத்தின் லிச்சாவி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது தற்போதைய தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் கலந்து கொண்டார். நிகழ்வில் ஆளுநர் நஸீர் அஹமட் தொடர்ந்து கருத்து தெரிவிகையில்:

சுற்றுலாத் துறை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்தி வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள தம்பதெனிய போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அதனை தூக்கி நிறுத்திய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே.

மாகாண சபை தேர்தல்களை நடத்தக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அன்று கூச்சலிட்டன.

எதிர்காலத்தில், வடமேல் மாகாணத்தை சகல துறைகளிலும் சிறந்த வளமுள்ள மாகாணமாக கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதா கவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவத்தகம தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT