Friday, May 10, 2024
Home » மனிதகுலத்தின் பெறுமதியான இருப்பில் பெண்களின் வகிபாகம் தவிர்க்க முடியாதது

மனிதகுலத்தின் பெறுமதியான இருப்பில் பெண்களின் வகிபாகம் தவிர்க்க முடியாதது

by Gayan Abeykoon
March 8, 2024 9:14 am 0 comment

பண்டைய காலத்திலிருந்தே மனிதகுலத்தின்  நிலையான இருப்பானது,  வலுவூட்டப்பட்ட பெண்களின் வலிமையைப் பொறுத்தாக இருந்ததாக,எதிர்க்கட்சித்  தலைவர் சஜித்பிரேமதாசா தெரிவித்துள்ளார்.மகளிர் தினச் செய்தியில் அவர்  தெரிவித்துள்ளதாவது;

தாயின் அரவணைப்பு, சகோதரியின் பாசம், மனைவியின் நேசம், மகளின் அன்பு என  சகலதையும் சமமாக அனுபவிக்கும் பாக்கியம்  தனக்கு கிடைத்ததால், பெண்ணின் தைரியம், பலம், உறுதிப்பாடுகளை  புரிந்து கொள்ள முடிந்தது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 52% பெண்கள் உள்ளனர்.  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்கள் 29% நேரடியாகப் பங்களிக்கின்றனர்.

பிறந்தது முதல் பல்வேறு வகிபாத்திரங்களை ஏற்று இந்த உலகை அழகுறச் செய்ய பெண்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் மறக்க முடியாது.

குழுந்தையாக வீட்டையும், இளம் பெண்ணாக உலகையும், மனைவியாக குடும்பத்தையும் அழகுபடுத்தும் பெண்ணின் தவிர்க்கமுடியாத தைரியம், வலிமைகளால், வீழ்ச்சியடைந்த நம் நாட்டை மீண்டும் மீட்டெடுக்கலாம்.  நாடு என்ற வகையில் நாம் இன்னும் பெண்களின் தைரியத்தையும், வலிமையையும் புரிந்து கொள்ளவில்லை.  இதை வருத்தத்துடன் சொல்ல வேண்டும். பாரம்பரிய கருத்துக்கள் மற்றும் அடிப்படைக் கருத்துக்களின் பேரிலேயே நாம் இன்னும் பெண்களை நோக்குகிறோம். இந்த மனோபாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT