Tuesday, April 30, 2024
Home » புத்தளம் அருவக்காலு குப்பை திட்டம் மார்ச் மாதத்துள் நிறைவு செய்யப்படும்

புத்தளம் அருவக்காலு குப்பை திட்டம் மார்ச் மாதத்துள் நிறைவு செய்யப்படும்

130 மில்லியன்டொலரில் மொத்த செலவு

by Gayan Abeykoon
January 25, 2024 10:21 am 0 comment

 புத்தளம், அருவக்காலு குப்பைத்திட்டம் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்துள் நிறைவடையுமென, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.  

முதலீட்டாளர்களுடன் தொடர்புகொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

அருவக்காலு குப்பைத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் (23) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரச அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தாமதங்கள் மற்றும் தவறுகளால் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு திரும்ப வராமல் போகலாம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி மற்றும் சீனாவின் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து அருவக்காலு குப்பை கிடங்கின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அந்த நாடுகளுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் அது பாதிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் நிலையான செயற்பாட்டுக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 5,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரச நிதியைப் பயன்படுத்தாமல் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, நிதி ரீதியாக இலாபகரமான மற்றும் நிலையான வகையில் அதனை நடத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வர்த்தக மாதிரியின் கீழ் இத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓரளவு ஈவுத்தொகையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT