Home » உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் பாடங்களுக்கு புதிதாக 5,500 ஆசிரியர்கள்

உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் பாடங்களுக்கு புதிதாக 5,500 ஆசிரியர்கள்

அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

by Gayan Abeykoon
January 25, 2024 10:23 am 0 comment

பாடசாலைகளுக்கு புதிதாக 5,500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு இந்த ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 09 மாதங்களாக விசாரணைக்கு உட்படுத்தி நிறைவடைந்துள்ளது.இதையடுத்து அடுத்த வாரம் இதுகுறித்த தீர்ப்பு வழங்கப்படும்.

ஆனால், அந்நபர்கள் தற்போது பாடசாலைகளில் இருப்பதால், 40,000 ஆசிரியர் வெற்றிடங்களிலிருந்து அவர்களை நீக்க வேண்டும்.

அனைத்து மாகாண சபைகளும் 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன.

இருந்த போதும், இது தொடர்பில் நிலவும் நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக அது தாமதமாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

லோரன்ஸ்செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT