Monday, April 29, 2024
Home » கடவுளால் இரக்கம் பெறுவோர் பேறுபெற்றோர்

கடவுளால் இரக்கம் பெறுவோர் பேறுபெற்றோர்

by damith
January 9, 2024 10:14 am 0 comment

கடவுளால் இரக்கம் பெறுவோர் பேறுபெற்றோர். கடவுள் இரக்கம் உடையவர். ஆதலால் எல்லோரும் இரக்கத்தைப் பெறமுடியும்.

எசாயா 55:7ஆம் வசனத்தின்படி கொடியவர்கள் தம் வழிமுறைகளை விட்டு, மனம் மாறி ஆண்டவரிடம் திரும்பும் பொழுது அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார். மன்னிப்பதில் தாராள மனம் உடையவர்அவர். ஏனெனில் மீட்க முடியாத அளவு அவர் கை குறுகிவிடவில்லை. கேட்க முடியாதவாற​ காது மந்தமாகிவிடவில்லை.

(ஏசாயா 59:1.2)

நம்மைநாமே ஆராய்ந்துப் பார்த்து வெளிவேடத்தை அல்ல உள்ளார்ந்த மனமாற்றத்தைக் கொண்டு வருவதை ஆண்டவர் விரும்புகிறார். ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர் இரக்கம் மிகுந்தவர். இந்த வார்த்தை தான் இன்று இந்தப் பாவம் நிறைந்த உலகில் இறைவனின் பிள்ளைகளாக எமக்கு வழி வகுக்கிறது.

நாம் ஆண்டவரின் நன்மைகளை (இரக்கத்தையும், அன்பையும்) அறிந்திருக்கின்றோம். ஆதலால் எதைச் செய்தாலும் இரக்கம் காட்டுவார். மன்னிப்பார். அன்பு செய்வார் என்று சொல்லிக் கொண்டு பாவத்தின் மேல் பாவம் செய்து பாவத்தைப் பற்றிய அச்ச உணர்வு இல்லாமல் இருக்கின்றோம்.

இந்த இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் அவ்வாறின்றி செபத்தை அறிந்த ஆண்டவருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். என நினைக்கும் ஒருவர் தனக்கு எதிரே வந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென்று கீழே விழுந்து விட, உடனே அவர் அச்சச்சோ! என்று சொல்லிவிட்டுக் கோயிலுக்குள் போய்விட்டார்.

அங்கு அவர் முழந்தாள் படியிட்டுச் செபிப்பது நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்(யாக்கோபு 4:17) என்று கூறியது போல் ஆகும்.

அவர் தூக்க உதவியிருக்கலாம். அல்லது உதவிக்கு ஆள் தேடி இருக்கலாம். எதையுமே செய்யாமல் கோவிலுக்குப் போய் முழந்தாள்படியிட்டுச் செபிப்பதை ஆண்டவர் விரும்பவில்லை.

இதைத் தான் நாம் ஆண்டவர் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன். (ஒசேயா 6:6.) அதனால் தான் ஆண்டவர் தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று என்னைத் தேடி வரும் வரை என் இடத்தற்குப் போய் அவருக்காய்க் காத்திருப்பேன்.

காத்திருக்கின்ற ஆண்டவரின் இரக்கத்தைப் பெற்ற நாம் இரக்கத்தைக் கொடுப்போம். இது தான் இயங்கும் இரக்கம். இரக்கத்தால் இயக்கப்பட வேண்டும் நாமும் பிறரையும் இயக்க வேண்டும். (மத்தேயு 5:7) இரக்கமுடையோர் பேறுபெற்றோர். எனெனில் இரக்கம் பெறுவர்.

(சாலமோனின் ஞானம் 12:5,6)

எதிர்க்க முடியாத குழந்தைகளைக் கொல்வது சிசுகொலை மன்னிக்கமுடியாத பாவம். உங்களையும் என்னையும் கொல்ல வந்தால் பேராடுவோம். ஆனால் கருவிலிருக்கும் குழந்தை என்ன செய்யும்? இந்த மாதிரியான பாவத்திற்கு அந்தக் காலகட்டத்தில் திருத்தந்தையிடம் பாவமன்னிப்புப் பெற்று பேதுரு ஆலயத்தில் நுழைந்து திருப்பலியில் பங்கேற்க வேண்டும் என்பது மரபு.

அதற்காகத் தான் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இரக்கத்தின் வாயில்களைத் திறந்து வைத்து ஒப்புரவு அருள்சாதனம் பெற்று இரக்கத்தின் வாயில் வழியாக நுழைந்துத் திருப்பலியில் பங்கேற்று நற்கருணை பெற்று இறைஇரக்கத்தைப் பெற வேண்டும் என்கிறார். அதை நாமும் செய்வோம். பலன் பெறுவோம்.

(திருப்பாடல் 139:1-3)

திருப்பாடல் ஆசிரியர் தாவீது கூறியது போல நம்மை முற்றிலும் அறிந்தவர். அவரை ஏமாற்றமுடியாது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அறிந்து இருப்பவர். (சீராக் 23:9) ஆண்டவரின் கண்கள் கதிரவனைவிடப் பத்தாயிரம் மடங்கு ஒளி படைத்தவை. திருப்பாடல் 145:9

தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுகிற கடவுள் உம் மீதும் என் மீதும் இரக்கம் காட்டாது இருப்பாரா? (யாக்கோபு 2:13) இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்பு தான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும். இதை நினைவில் கொள்வோம். இரக்கமுடையோராய் வாழ்வோம்.

திருமதி ஜெயமேரி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT