Tuesday, April 30, 2024
Home » நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிச் சென்ற பாட்டி

நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிச் சென்ற பாட்டி

- கையடக்கத் தொலைபேசி என டயல் செய்த போது வெளிவந்த பஸ் டிக்கெட்

by Prashahini
January 5, 2024 9:28 pm 0 comment

புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பஸ்ஸொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.

இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அந்த பஸ் அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமானதாகும்.

குறித்த வயோதிப பெண் பஸ்ஸில் ஏறியதும், நடத்துனர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.

அப்போது பஸ்ஸில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

பஸ்ஸில் ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தால் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பஸ் டிக்கெட்டுகள் வெளி வந்தன.

இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சந்தேகநபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT