Wednesday, May 1, 2024
Home » இன்றும் கிழக்கு, ஊவா பகுதிகளில் இடியுடன் மழை

இன்றும் கிழக்கு, ஊவா பகுதிகளில் இடியுடன் மழை

- வடக்கு, வடமத்திய பகுதிகளில் பல தடவைகள் மழை

by Rizwan Segu Mohideen
December 30, 2023 8:24 am 0 comment

– சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

இன்றையதினமும் (30) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஒரு சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணம் மற்றும் அநுராதபுரம், கண்டி மாவட்டங்களில், பல தடவைகள் மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களில்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT