Home » தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நூல்கள் அன்பளிப்பு வைபவம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நூல்கள் அன்பளிப்பு வைபவம்

by Gayan Abeykoon
May 1, 2024 7:38 am 0 comment

ல்கலைக்கழகத்தை சமூகத்துடன் இணைத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாக பொதுநூலகங்களை வலுவூட்டல் திட்டமானது பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படுகின்து.

இதற்காக SERLIN தென்கிழக்குப் பிராந்திய நூலக தகவல் வலையமைப்பானது பெரும் பங்காற்றி வருகின்றது. இந்த வகையில் உலகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி சிறப்பித்தது.

இதற்கான நூல்களை அவுஸ்திரேலியாவிலுள்ள YM TRUST நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.

இதுவரை இந்நிறுவனமானது சுமார் 6341 புத்தகங்களை 04 கட்டங்களாக வழங்கியுள்ளது. அனைத்து நூலகளும் இப்பிரதேசத்திலுள்ள 25 பொதுநூலகங்களுக்கும் 55 பாடசாலை நூலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நூல்களின் மொத்தப் பெறுமானம் சுமார் 08 மில்லியன் ரூபா ஆகுமென சிரேஷ்ட உதவி நூலகரும் வெளிக்களப்பயிற்சி இணைப்பாளருமான எம்.சி.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பின்வரும் நூலகங்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டன.   நிந்தவூர் பொது நூலகம், சாய்ந்தமருது பொதுநூலகம், வாசிப்பு நிலையம் வீரமுனை, பொதுநூலகம் ஒலுவில், அல்ஹம்றா வித்தியாலயம் ஒலுவில், சம்மாந்துறை அமிர்அலி வித்தியாலயம், மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை, அட்டாளைச்சேனை பொதுநூலகம்

மேற்படி நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்,கலை கலாசார  பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி எச்.எம். ஹாறுன், நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் மற்றும் பதிவாளர், நிதியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திராய்க்கேணி 

தினகரன் நிருபர்  

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT