Wednesday, February 28, 2024
Home » மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி

by Prashahini
November 30, 2023 10:26 am 0 comment

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்விபத்தில் 20 வயதான குணம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, குறித்த இளைஞன் பளை நகரத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT