கண்டி திரித்துவக் கல்லூரிக்கு எதிரான 13 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியில் மடவல அல் மதீனா தேசிய கல்லூரி சீரற்ற காலநிலையால் நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான இந்தப் போட்டி கண்டி பொறமதுல்ல மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மடவல அல் மதீனா தேசிய கல்லூரி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி திரித்துவக் கல்லூரி 29 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது. இப்போட்டியில் மடவல அல் மதீனா தேசிய கல்லூரி வீரர் ஸஸாட் 168 பந்துகளுக்கு 34 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைப் பெற்றார்.
மாளிகைக்காடு குறூப் நிருபர்