Monday, May 20, 2024
Home » பாக்கினிகஹவெல முஸ்லிம் கல்லூரி நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர்

பாக்கினிகஹவெல முஸ்லிம் கல்லூரி நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர்

by mahesh
May 8, 2024 8:00 am 0 comment

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அண்மையில் மொனராகலை மாவட்டத்தின் பிபில கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் விசேட கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன் பாக்கினிகஹவெல முஸ்லிம் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அதிபர் எம். எச். எம். முபாரக் தலைமையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், கல்லூரியின் மனித வளங்கள் மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான கள கண்காணிப்பிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச, மெதகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரஞ்சித் பியதிகம, மாவட்ட காஸி நீதவான் மெளலவி ஸல்ஸபீல் மற்றும் ஊர் ஜமாத்தினர், பள்ளிவாயல் நிர்வாகிகள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான பரிசில்களும் தூர இடங்களிருந்து பாடசாலைக்கு வரும் மாணவைர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்வி அமைச்சருக்கு பாடசாலை அதிபரால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

எம்.ஏ.எம்.ஹசனார் 
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT