Monday, May 20, 2024
Home » நீரிழிவு, இரத்த அழுத்தம் வியாதியேதும் இல்லாத எனக்கு மாரடைப்பு வந்ததற்கான காரணமென்ன?

நீரிழிவு, இரத்த அழுத்தம் வியாதியேதும் இல்லாத எனக்கு மாரடைப்பு வந்ததற்கான காரணமென்ன?

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியை உரியபடி கடைப்பிடிக்கும் பொலிவுட் நடிகர் ஷ்ரேயஸ் தல்படே கூறுகின்ற விளக்கம்

by mahesh
May 8, 2024 8:00 am 0 comment

கொரோனா பெருந்தொற்றுக்குக் கண்டுபிடிக்கப்பட்ட ெகாவிஷீல்ட் தடுப்பூசி, தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில், இந்திய ​ெபாலிவுட் நடிகர் ஒருவர், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு கொவிட் தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று கூறியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஹிந்தி மற்றும்‌ மராட்டிய மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஷ்ரேயஸ் தல்படே . 48 வயதாகும் இவருக்கு, கடந்த ஆண்டு படப்பிடிப்பில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

தற்போது நலமுடன் இருக்கும் ஷ்ரேயஸ் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் கொவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதாகக் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “என் உடல்நலனைப் பாதுகாக்க நான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற அனைத்தையும் மேற்கோண்டும், மாரடைப்பு ஏற்பட்டதை எதிர்ப்பார்க்கவில்லை. சமீப காலமாக விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது நடந்து கொண்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“தற்போது கொவிட் தடுப்பூசி அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. நான் புகைப்பிடிப்பது இல்லை, தினசரி மது அருந்தும் பழக்கமும் இல்லை, அரிதாக எப்போதாவது மட்டுமே மது அருந்துவேன். என் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கும் மருந்துகள் எடுத்து பிரச்சினையை கட்டுக்குள் வைத்திருக்கிறேன்.

எனக்கு நீரிழிவு நோயும் இல்லை, இரத்த அழுத்தப் பிரச்சினைகளும் இல்லை. அப்படி இருக்க மாரடைப்பு ஏற்பட என்ன காரணமாக இருக்க முடியும்? கொவிட்‌ தடுப்பூசி இது போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற கூற்றை என்னால் மறுக்க முடியவில்லை. அதில் உண்மை இருக்குமோ என்று தோன்றுகிறது. உண்மையில், முழுமையான டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.

கொவிட் தடுப்பூசியோ, கொரோனா நோய்த்தொற்றோ இந்தப் பிரச்சினை ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம். என்ன மருந்து எடுத்துக்கொள்கிறோம், அது நம் உடலில் என்ன செய்யும் என்றே தெரியாமல் மருந்து நிறுவனங்களை நம்பியே மருந்தை எடுத்துக்கொள்கிறோம். கொவிட்டுக்கு முன்னர் இப்படி ஒரு பிரச்சினையை நான் ஏதிர்கொண்டது இல்லை. இப்படி பக்க‌விளைவுகள் ஏற்படும் என்று கேள்விப்பட்டதும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் ஷ்ரேயஸ் தல்படே.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT