101
யாழ். பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 22 பேரும் சனிக்கிழமை (18) மதியம் கைது செய்யப்பட்டனர். தமிழகம் – பாம்பன் பகுதியிலிருந்து இரண்டு படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரையும் படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (19) காலை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.