Saturday, April 27, 2024
Home » எதிர்வரும் ஞாயிறன்று சீரடி சாயி பாபா திருவுருவத்துடன் பக்தர்கள் நடைபயணம்

எதிர்வரும் ஞாயிறன்று சீரடி சாயி பாபா திருவுருவத்துடன் பக்தர்கள் நடைபயணம்

by damith
October 10, 2023 12:04 pm 0 comment

இலகுவாக அணுகக்கூடிய குருவாக எழுந்தருளியுள்ள சீரடி சாய் பாபாவின் திருவருள் இலங்கை நாடெங்கும் பரவி வரும் இந்த இந்நன்னாட்களில், கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் ஐங்கரன் மண்டபத்தில் அமைந்துள்ள சீரடி சாயி பாபாவின் ஐம்பொன்னால் ஆன அழகிய அருள்மிகு திருவுருவம், கொழும்பு மாநகரெங்கும், பக்தர் நடைபயணமாக புடை சூழ வீதிவலம் வரவிருக்கின்றது.

எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு புறப்படும் இந்த நடைபயணம், பம்பலபிட்டி வஜிரா வீதி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து காலி வீதி வழியாக, காலிமுகத்திடல் தாண்டி கோட்டை, புறக்கோட்டை, பிரதான வீதி, செட்டித்தெரு,, ஜிந்துப்பிட்டி, விவேகாநந்த வீதி வழியாக புதுச்செட்டித் தெரு, ஜம்பட்டா தெரு, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை வீதி வழியாக சுமார் 11.30 மணியளவில் ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாயி நாதனின் சரணாலயம் வந்து சேரும். பக்தர்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்வது ஆன்மீக, உடல், உள நலனுக்காக மட்டுமன்றி, அவிசாவளையில் நம் நாட்டிலேயே மிகப் பிரமாண்டமான சீரடி சாயி பாபாவின் ஆலயம் மற்றும் ஆன்மீக சமூக சேவை மயமாக உருவாகி வரும் திருப்பணியைப் பற்றி மக்களிடையே அறியச் செய்வதும் இந்த நடைபயணத்தின் நோக்கமாகும்.

பக்தர்கள் அனவரையும் இந்த அருமையான ஆன்மீக அருட்பயணத்தில் பங்குகொள்ளுமாறு அறங்காவலர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு 077 3139954 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT