373
தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2002 வகுப்பினர் சம்பியன் கிண்ணத்தை வென்றனர். தெல்தோட்டை மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரில் 2003 வகுப்பினருக்கு எதிராக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நவாஸ் தலைமையிலான அணி வெற்றியீட்டியது. அதேவேளை வயது மூத்த பழைய மாணவர்களுக்காக இடம்பெற்ற போட்டியில் சஹ்ரான் தலைமையிலான அணி வெற்றிபெற்றது.
சிறந்த துடுப்பாட்ட வீரராக 2003 வகுப்பு அணியின் தலைவர் அமீன் தெரிவு செய்யப்பட்டதோடு சிறந்த பந்துவீச்சாளராக 2002 வகுப்பு அணியின் ஷாபி தெரிவானார்.