Monday, April 29, 2024
Home » 2023 A/L பரீட்சை ஜனவரி 04 முதல் 31 வரை

2023 A/L பரீட்சை ஜனவரி 04 முதல் 31 வரை

- இன்னும் விண்ணப்பிக்காதோருக்கு 10ஆம் திகதி வரை வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
October 4, 2023 6:37 pm 0 comment

– மாற்றம் செய்யப்பட்ட நேர அட்டவணை விரைவில் வௌியீடு

2023 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை (2024) நடைபெறும் திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 2024 ஜனவரி 04 முதல் ஜனவரி 31 வரை க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் நடைபெறும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்குரிய மாற்றம் செய்யப்பட்ட நேர அட்டவணை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்த்து ஆனால் இதுவரையில் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரிகள் இருப்பின் அவ்விண்ணப்பதாரிகள் மட்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணிவரை ஒன்லைன் முறைமையில் இதற்காக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk ஊடாகவோ அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாகவோ பிரவேசித்து online முறைமையில் விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு
நேரடி தொலைபேசி இலக்கம் – 1911, 0112784208, 0112784537, 0112786616
தொலைநகல் இலக்கம் – 011 2784422
பொதுத் தொலைபேசி இலக்கங்கள் – 0112784200, 0112784201, 0112784202
(நீடிப்பு 263, 265,280,282,443)

மின்னஞ்சல் முகவரி – [email protected]

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT